தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை – பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
Wednesday, April 28th, 2021
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள பொலிஸார் அவர்களுள் அதிகமானவர்கள் மொனராகல, திருகோணமலை மற்றும் களுத்துறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3,900 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாதம் 30 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்கள் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 10,000 ரூபா தண்டப்பணம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றுலா பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவருக்கு விளக்கமறியல்!
கல்வி அமைச்சின் தகவல்களை வழங்குவதற்கான புதிய பொறிமுறை
இந்திய முட்டைக்கு எதிராக உள்ளூர் உற்பத்தியாளர்கள் சதி - அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்...
|
|
|


