தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தப்படும் சிலர் அந்த பொறுப்பை புறக்கணித்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது கடினம் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Thursday, October 22nd, 2020

இரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் இலங்கையில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பொது விழாக்களை ஏற்பாடு செய்யவோ அதில் பங்கேற்கவோ கூடாது என்பது அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்றுமம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரவுள்ள எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்று கூறியதுடன், பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவும், அடிக்கடி வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் மக்கள் நாட்டின் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தப்படும் சிலர் அந்த பொறுப்பை புறக்கணித்தால், இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது தடையாக இருக்கும் என்றும் இராணுவத் தளபதி எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: