சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்!

Friday, July 14th, 2017

மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரை விடுவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை பொலிஸ்துறையின் மூத்த அதிகாரிக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மூத்த பிரதி காவல்துறை மா அதிபரான, லலித் ஜெயசிங்கவுக்கு, தேசிய காவல்துறை ஆணைக்குழுவினால் இந்த குற்றச்சாட்டுப் பத்திரம் நேற்று வழங்கப்பட்டதாக, ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்தார்.

குற்றப்பத்திரத்துக்கு ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், தேசிய காவல்துறை ஆணைக்குழு, மூத்த பிரதி காவல்துறை மா அதிபரான, லலித் ஜெயசிங்கவிடம் கூறியுள்ளது. வித்தியா கொலையின் பிரதான சந்தேகநபரான, சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமாரை விடுவிப்பதற்கு உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தார் என்று மூத்த பிரதி காவல்துறை மா அதிபரான, லலித் ஜெயசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts: