தனிநபருக்கு சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை கிடையாது!
Tuesday, July 19th, 2016
எந்தவொரு நபருக்கும் சட்டத்தை கையில் எடுக்க உரிமை இல்லை. யாழ் – பல்கலைக்கழக மோதல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
யாழ் – பல்கலைக்கழக மோதலில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது இடம்பெற்ற சிறிய மோதலை சிலர் பெரிதாக்கி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெளியில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
Related posts:
இன்று நிதி திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!
பொலிஸ் பதவியில் நீண்டகாலமாக இருப்போருக்கு பதவி உயர்வு!
யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுப...
|
|
|
மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை: நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா பரவாது - சுகாதார அமைச்சு அற...
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு - நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
முழுமையாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது காங்கேசன்துறை துறைமுகம் - 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி...


