யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, October 28th, 2023

பரீட்சை திணைக்களத்தினால் வினாத்தாள்களை தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றது. அன்றுமுதல் இன்றுவரை அந்த தரம் பேணப்பட்டு வருவதாகவும், அதனை தொழிலாக கொண்டவர்களே விமர்சனங்களை முன்வைப்பதாகவும், அது பயனற்றது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர்,

‘யார் பிரச்சினையை ஏற்படுத்தினாலும் பொறுப்புக்களை ஏற்றவர்கள் என்ற வகையில் சரியான தீர்வுகளை வழங்க பாடுபடுவேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல சவால்கள் இருந்த வேளையில் தான் கல்விக்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டேன்.

மேலும், ஆசிரியர், அதிபர்களின் போராட்டம் ஒடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,

ஆசிரியர் சங்கங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி இதுவரையில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து வைத்துள்ளேன்’.

வரவு செலவுத் திட்ட ஆவணம் வெளிவரவுள்ள நிலையில், ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுமன்றி ஏனைய சேவைகளுக்கான சம்பள முரண்பாடுகளை களைய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து சில ஒதுக்கீடுகளை ஒதுக்கித் தருமாறு பரிந்துரைத்துள்ளோம்.

அதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால், அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறது.

தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைப்பது சகஜம் என்றும், கல்வி மாநாட்டிற்காக வெளிநாட்டில் இருந்தபோது ஏற்பட்ட சூழ்நிலையால் எந்த தரப்பினருக்கும் முன்விரோதம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் அதுபற்றி தேவையில்லாமல் கவலைப்பட்டு பயனில்லை என்றார்.

எதிர்வரும் வாரத்தில் தொழிற்சங்க குழுக்களை சந்திக்கவுள்ளதாக தனது கவலையை தெரிவிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: