அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அரச ஊழியர் அழைப்பு – புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது அரசாங்கம்!

Wednesday, May 25th, 2022

அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி நிலையில் பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு  இது தொடர்பான சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடி கலந்துரையாடியுள்ளதோடு தேவையான ஊழியர்கள் குறித்து நிறுவன பிரதானிகள் தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு - தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் ப...
ஒக்டோபர் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை - கல்வி இராஜாங்க அமை...
மத்திய வங்கி அதன் ஊழியர்களுக்கு மேற்கொண்ட சம்பள அதிகரிப்பை திருத்தம் செய்ய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகா...