தடை விதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!

Saturday, July 7th, 2018

யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பகிடிவதை விவகாரத்தில் வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் மீளவும் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் கடந்த 21ஆம் திகதி பகிடிவதை காரணமாக மொட்டையடித்துக் கொண்டமை தொடர்பாக அதே பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கால வரையறையற்ற வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தவிடயம் தொடர்பாக வளாகநிர்வாகத்தினருக்கும் பிரயோக விஞ்ஞான பீடமாணவ பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளதாக யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மனித உரிமை ஆணைக்குழுவின் வேண்டுகோளிற்கமைய மொட்டையடிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் - இலங்கைக்கான பதில் சீன தூத...
அமரர் ஆறுமுகனின் தொண்டமானின் பூதவுடல் பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாது ...