யாழ். மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளிற்குமாக 125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Friday, December 22nd, 2017

யாழ். மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளிற்குமாக 125 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு இன்று (21) நண்பகல் 12 மணிவரை யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
வேட்புமனுத் தாக்கலின் பின்னர், ஆட்சேபனைக்கான கலந்துரையாடல் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்களுடன் தெரிவத்தாhட்சி அலுவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
அதன்பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

யுhழ்.மாவட்டத்தில் 16 சபைகளிற்குமாக 125 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பிரகாரம், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுயேட்சைக் குழு ஒன்றும், நெடுந்தீவு, யாழ்.மாநகர சபை, வலி. வடக்கு மற்றும் வலி.விழக்குப் பிரதேச சபைகளிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதில், யாழ்.மாநகர சபைக்காக 8 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. ஆதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் சிலர் பகுதியாக நிராரிக்கப்பட்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை நகரசபைக்குரியதில், 7 அரசியல் கட்சியும், ஒரு சுயேட்சைக் குழுவும் தாக்கல் செய்துள்ளது. அதில் 7 கட்சிகளும், 1 சுயேட்சைக்குழுவினதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பருத்த்தித்துறை பிதேச சபையிக்குரியதில், 7 அரசியல் கட்சியும், 1 சுயேட்சைக்குழுவும் தாக்கல் செய்ததில், 8 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

காரைநகர் பிரதேச சபைக்கானதில், 7 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சைக்குழுவும் தாக்கல் செய்ததில், 8 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஊர்காவற்துறை பிரதேச சபைக்கானதில் 7 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்திருந்தன. அதில் 7 அரசியல் கட்சிகளினதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆதில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரின் பெயர் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச சபைக்கானதில், 6 அரசியல் கட்சியும் 1 சுயேட்சைக்குழுவும் தாக்கல் செய்ததில், 1 நிராகரிப்பு,ஏனைய 5 கட்சிகளும், 1 சுயேட்சைக்குழுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
வேலணைப் பிரதேச சபைக்கானதில் 8 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ததில் 8 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலி. மேற்கு பிரதேச சபைக்கானதில் 8 அரசியல் கட்சிகளும், 2 சுயேட்சைக்குழுக்களும் தாக்கல் செய்திருந்தன. அதில் 1 சுயேட்சைக்குழு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய 8 அரசியல் கட்சிகளினதும், 1 சுயேட்சைக்குழுவிதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலி.வடக்குப் பிரதேச சபைக்குரியதில் 7 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்திருந்தன. அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒருவரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது. வலி. தென்மேற்குப் பிரதேச சபைக்குரியதில், 7 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வலி.தெற்குப் பிரதேச சபைக்கானதில், 7 அங்கிகரிக்கப்பட்ட கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 7 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒருவர் நிராகரிக்கப்பட்டுள்ளார். வலி.கிழக்குப் பிரதேச சபைக்குரியதில், 7 அரசியல் கட்சிகளும், 1 சுயேட்சைக்குழுவும் தாக்கல் செய்திருந்தன. அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரினதில் ஒரு வேட்பாளரின் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபைக்கானத்தில், 7 அரசியல் கட்சிகள் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தன. 7 வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பருத்தித்துறை பிரதேச சபைக்குரியதில் 7 அரசியல் கட்சிகளின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. 7 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு வேட்பாளர் நிராகரிப்பு.
சாவகச்சேரி பிரதேச சபைக்குரியதில் 9 அரசியல் கட்சிகள் தாக்கல் செய்திருந்தனர். 9 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நல்லூர் பிரதேச சபைக்குரியதில்,8 அரசியல் கட்சியும் ஒரு சுயேட்சைக்குழுவுமாக 9 வேட்புமனுக்கள் அதில் 9 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: