பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் ஊரடங்கின் பலனை பெற்றுக்கொள்ள முடியாது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, September 2nd, 2021

பொதுமக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பலனளிக்காது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர், பல்வேறு காரணங்களைக் கூறி பெரும்பாலான பொதுமக்கள் பொதுவில் சுதந்திரமாக நடமாடுவதை அவதானிக்கக் முடிவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோகண சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பொது மக்கள் மாத்திரமின்றி அதிகாரிகளும் மீறுகின்றனர். இந்நிலை நீடித்தால் முழு நாடும் பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல், வைரஸ் பரவுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் மற்றும் அதிகாரிகளின் தற்போதைய நடத்தை நாட்டில் ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் சரியாக அமல்படுத்தப்படாவிட்டால், ஊரடங்கு காரணமாக நாடு நிதி ரீதியாக சுமையாக உள்ளது. இலங்கை பொருளாதார மற்றும் சுகாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொரோனா தொற்றினை முடிவிற்கு கொண்டு வருவதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது குறைவில்லை. அடுத்த சில நாட்களில் தொற்று விகிதம் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து விதித்து, தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்  எவ்வாறியினும் விதிமுறைகளை கடுமையாக அதிகாரிகள் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” - தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும்...
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுநிலை - கன மழைக்கும் சாத்தியம் என விரிவுரையாளர் நாகமுத்து பிர...
மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்கும் மாணவர்கள் - பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வ...