தடுப்பூசி வழங்கலில் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னுரிமை வேண்டும் – வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் புவி வலியுறுத்து!

Tuesday, March 9th, 2021

கொரோனா அச்சுறுத்தல் இருந்துவரும் நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் தமக்கு கொரோனா தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படாமை கவலை தருவதாக வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் கிருஸ்னன் புவி தெரிவித்துள்ளார்..

காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பி.சி.ஆர்.பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் அதிகளவான சாலை ஊழியர்கள் இனங்காணப்பட்டு சுகாதார தரப்பினரால் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சாலையின் செயற்பாடுகளும் முடங்கம் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு மக்களுடன் நெருக்கமான தொடர்பை பேணுபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டது.

ஆனாலும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வடக்கு மாகாண சாலை ஊழியர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படாத நிலை காணப்பட்டது. இதனால் தற்போது எமது காரைநகர் சாலையில் சில ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எமது சேவையும் ஊழியர்களது பாதுகாப்பை மட்டுமல்லாது பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் கொரோனா தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவது அவசியம் என்றும் இதில் சுகாதார தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்படத்தக்கது.

இந்நிலையில் இது தொபடர்பில் வடக்கு மாகாதண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதிஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் –

உண்மையில் எமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் குறைந்தளவானதாகவே இருந்தன. அவற்றை நாம் சுகாதார சேவைகளை மேற்கொள்ளும் தரப்பினருக்கு முன்னுரிமை வழங்கி செலுத்தியிருந்தோம். மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் எமக்கு கிடைக்கப்படும் பட்சத்தில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தரப்பினர் உள்ளிட்ட மக்களுடன் தொடர்பில் இருக்கும் தரப்பினருக்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாவும் அந்த சந்தர்பத்தில் குறித்த தரப்பினர் முன்வந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதும் அவசிமானதென்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: