நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Thursday, February 25th, 2021

புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலீயுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தக் கலந்துரையாடலில் கனிய வள ஆய்வு நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான மாது ஓயாவுக்கு அருகிலுள்ள சதுப்பு நில அமைப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசின் உதவியைப் பெறுவது குறித்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாக சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: