தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குள் நுழையத் தடை – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, February 5th, 2022

கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாத நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைவதை தடை செய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் இந்த உத்தரவானது நடைமுறைக்கு வருகிறது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தடுப்பூசி போடாத நபர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் தனி நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் விலக்கு சான்றிதழ் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: