அரச அலுவலக தொடர்பாடல்களுக்கு வட்ஸ் அப், டுவிட்டருக்குத் தடை!

Friday, December 14th, 2018

அரசாங்க அலுவலகங்களுக்கும் அரச அலுவலர்களுக்குமிடையே உள்ள தொடர்பாடல்களுக்காக வட்ஸ் அப், டுவிட்டர் என்பன அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லையென பொது நிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்திற்கமைய இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் முக்தார் மேற்படி விடயம் தொடர்பாகத் தெளிவுபடுத்துமாறு பொது நிர்வாக அமைச்சைக் கோரியிருந்தார்.

இதற்கான பதிலாக பொது நிர்வாக அமைச்சு வட்ஸ் அப், டுவிட்டர் என்பன உத்தியோகத் தொடர்பாடல் அல்லவெனவும் இதுவரை டெலி மெயில், டெலி பெக்ஸ், ஈ-மெயில், குறுஞ்செய்திச் சேவை, எஸ்.எம்.எஸ் என்பன மாத்திரம் உத்தியோகத் தொடர்பாடல்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் சில கல்வி வலயங்களில் உத்தியோகபூர்வ விடயங்கள் பாடசாலை அதிபர்கள், அதிகாரிகளுக்கிடையே வட்ஸ் அப் மூலமாக மேற்கொள்ளப்படுவதையடுத்தே மேற்படி விடயம் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் கவனத்திற்கு தாம் கொண்டுசென்றதாக ஜனாப் முக்தார் தெரிவித்தார்.

Related posts: