சீனிக்கு கட்டுப்பாட்டு விலை –  அரசாங்கம் !

Tuesday, October 9th, 2018

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனிக்காக, 100 ரூபா கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக கைத்தொழில், வணிக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் தொடர்பிலான அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts:


வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி !
ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க  போக்குவரத்து சபை தீர்மானம்!