தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் ஆபத்தான நிலைகை்கு செல்ல கூடும் – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் எச்சரிக்கை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் கொரேனா தொற்றாளர்கள் பலருக்கு தொடர்ந்து ஒக்ஸிஜன் வழங்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் கொரேனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ஷ சத்திசந்திர தெரிவித்து்ளளார்.
தேசிய வைத்தியசாலையில் கொரேனா தொற்றாளர்கள் 325 பேர் இதுவரையில் விகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 75 க்கும் அதிகமானோர் ஒக்ஸிஜன் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாகும்.
துரதிஷ்டவசமாக அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டில்லை. அவர்களுக்கு ஒக்ஸிஜனை அகற்றுவதற்காக வாய்ப்புகள் இல்லை. சிலர் ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் ஆபத்தான நிலைகை்கு செல்ல கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|