தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக சீன அதிபருக்கு மடல் அனுப்பியுள்ள இலங்கையின் அரச தலைவர் !
Saturday, January 16th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான இலங்கையின் தூதுவர் பாலித கோஹன, சீன வெளிவிவகார அமைச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குக் கையளித்துள்ளார்.
இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இலங்கைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, 70 வீதமான பொதுமக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை அல்லது தற்போது காணப்படும் இரண்டாம் அலையின் பரவல் நிலைமைகள் மேலும் விரிவடைய இடமளிக்காது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


