தகுதி பெறும் அனைத்து மாணவரும் பல்கலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை கோப்குழு தலைவர் தெரிவிப்பு

Wednesday, May 31st, 2017

பல்கலைக்கழகத்துக்கு வருடாந்தம் தகுதிபெறும் மாணவர்கள் 2ஆயிரத்து, 500 பேர் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்று கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் செயற்பாடு தொடர்பாக விசாரணை செய்த போதே இது தொடர்பாக தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை பின்வருமாறு

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 2ஆவது முறை மற்றுமொரு தெரிவு நடைபெறும். ஆனால் அதன் பின்னரும் இந்த மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதில்லை. மேலும் மாணவர்கள் நிதிக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கோடி 37 இலட்சம் ரூபா நிலையான வைப்பொன்றில் செலவு செய்யப்படாமல் அப்படியே இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசிலுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்ட மாணவர்களைத் தெரிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே அந்தப் பணம் செலவழியாமல் அப்படியே உள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

Related posts: