ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் 31 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!

Wednesday, October 28th, 2020

கொரோனா தொற்று நிலைமை காரணமாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் ஆணைக்குழு கூடி சாட்சி பெறும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தினங்களில் சாட்சி வழங்கவிருந்த அனைத்து தரப்பினருக்கும் இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாட்டு காலத்தை எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வாழ்வாதார முதலீடாக உள்ள முச்சக்கர வண்டி சேவை மக்கள் மனதை வென்ற சேவையாக உருவாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ...
மன்னார் மாவட்டத்தின் பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து - தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மன்னார...
கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றச்சா...

குடாநாட்டில் ஜனநாயக சூழ்நிலையை தோற்றிவித்தவர்கள் நாம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிப்பு - இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க எச்சரிக்...
நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல - மக்களின் நண்பன் - மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் ...