தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, August 1st, 2023

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று  (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்பதாக அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுரத்தி பெறுனர்கள் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி – உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(31)  வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அதேவேளை, கடந்த 27 ஆம் திகதி ஜனாதிபதியினால் நடத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் கோழி இறைச்சி விலை உயர்வால் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts:

தடுப்பூசி வழங்கப்படாது விட்டால் வேலை நிறுத்த போராட்டம் – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ...
இளைஞர்களை வீதிக்கு அழைக்கும் சூழ்ச்சி இடம்பெறுகின்றது - குற்றம்சாட்டுகின்றார் அமைச்சர் சுசில் பிரேமஜ...
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது - அதில் தலையிடவ...

சனநெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா பரவலின் வேகமும் அதிகரிப்பு - பொது சுகாதார பரிசோதகர்கள் எச்...
தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
தொழில் நுட்பத்தை நாம் இயக்க வேண்டுமே தவிர எங்களை தொழில் நுட்பம் இயக்க முயன்றால் வாழ்க்கை திசைமாறிச் ...