தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Monday, March 15th, 2021
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10,ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அத்துடன் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இந்த மாதத்தில் இடம் பெறவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கணினி தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் 40 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பன Online ஊடாக கற்பித்தல் பாடநெறியை ஆரம்பித்துள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீர்க்கட்டண யோசனைக்கு அமைச்சரவை எதிர்ப்பு!
இணைய வழி கடவுச்சீட்டு முறைமையில் 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியக...
தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்த வேண்டாம் - குழந்தைகளுக்கு ஏற்படும் உபாதைகள் குறித்து பெற்றோருக்கு அவ...
|
|
|


