ட்ரோன் கமராக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்!
Friday, May 17th, 2019
நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கமராக்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் வானூர்திச் சேவை அதிகாரியால் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வகையான கமராக்களை உடைமையில் வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைப்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத படசத்தில் இராணுவத் தேடுதல்களின்போது அவை கண்டுபிடிக்கப்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 – யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது...
இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு - உலக வங்கியின் பிரதிநிதி...
|
|
|


