தடுப்பூசி செலுத்தும் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

Friday, January 29th, 2021

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா ஷெனேக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை முதலாவதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு செலுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினர் மூன்று பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேல் மாகாணத்தில் 6 பிரதான வைத்தியசாலைகளில் சுகாதார தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றையதினம் ஆரம்பமாகியது.

இதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் வழங்கிய முதல் தொகுதியான 5 இலட்சம் கொவிட் 19 தடுப்பூசிகள் நேற்றையதினம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: