டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரிப்பு – இதுவரை 24,523 பேர் பாதிப்பு என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Friday, June 3rd, 2022

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்து 523 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 ஆயிரத்து 483 பேர் கடந்த மே மாதத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேற்றுமாத்திரம் 313 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கண்டி, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: