ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 7800 ஆசிரியர்களுக்கு, புதிய நியமனங்கள் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, May 19th, 2023

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் சுமார் 7800 ஆசிரியர்களுக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி புதிய நியமனங்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுதர பரீட்சையில் உயர் சித்தியுடன் சித்தியடைந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போதே அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டு பொதுத் தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும் 

எதிர்காலத்தில் விஞ்ஞானம் போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்று 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த புலமைப்பரிசில் திட்டம் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: