டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்ப – யாழ். போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைப்பு!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பாக ஆண் பெண் மருத்துவ விடுதிகளில் நோயாளர்கள் படுக்கைகள் இன்றி பெரும் சிரமப்படுகிறார்கள் .இந்த நிலைமையை சமாளிப்பதற்காக மேலும் இரு தற்காலிக மருத்துவ விடுதிகள் இன்று திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
க.பொ.த சாதாரண தர மீளாய்வு பெறுபேறு வெளியானது!
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - தொற்...
உயர் நீதிமன்ற நீதியரசர் உட்பட மூவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
|
|