டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அபராதம் – வெளியானது முக்கிய அறிவிப்பு!

Monday, June 12th, 2023

வீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம்முதல் அமுலுக்கு வரவுள்ளது.

சமீப வாரங்களாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறன்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இதுவரை 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு கடந்த ஐந்து மாதங்களில் 26 பேர் டொங்கு நோயால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேநேரம் நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகம் இரண்டு குழுக்களையும் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: