டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள இடங்கள் தொடர்பில் பாரபட்சமின்றி வழக்கு – அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்து!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றுப் பரவுவதற்கு ஏதுவான சூழலைக் கொண்டுள்ள குடியிருப்புக்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் எந்தவித பாரபட்சமும், தயக்கமும் இல்லாமல் வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்ன அறிவுறுத்தல் விடுத்துள்ளார்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்குத் தொற்று அபாய கட்டத்தில் காணப்படுகின்றது. டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இதன்படி, டெங்கு நுளம்பு உற்பத்திக்கு ஏதுவான நிலைகளைக் கொண்ட, நீர் தேங்கும் வகையில் கழிவுகளைக் கொண்டுள்ள குடியிருப்பாளர்கள்,
வெற்றுக்காணிகளைப் பராமரிக்காத உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பானவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரட்ன அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|