டெங்கு காய்ச்சலால் 42,000 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், சுமார் 42,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
இளைஞர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அமெரிக்கா உதவி!
பாடசாலைகளில் தனியார் புத்தகங்கள் விற்கத் தடை!
இலங்கையின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க தயார் – சீனா அறிவிப்பு!
|
|