டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவில் 90 குடியிருப்பாளர்கள் மீது வழக்கு!

Wednesday, April 12th, 2017

டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 90 குடியிருப்பாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் டெங்கு நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாதம் 29ஆம் திகதியிலிருந்து கடந்த 4 ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக காணப்படும் குடியிருப்புக்கள் மற்றும் இடங்கள் இனங்காணப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பொதுச் சுகாதாரப் பிரிவினர் இராணுவத்தினர் உள்ளிட்டோர் இணைந்து முன்னெடுத்த தேடுதலில் கடந்த வாரத்தில் மாத்திரம் 90 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று யாழப்பாண பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: