டிஜிட்டெல் தொழில் நுட்பம் மூலம் கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்கு கொடுப்பனவு!
Wednesday, July 12th, 2017
கர்ப்பிணிப் பெண்களுக்கான போஷாக்குக் கொடுப்பனவு டிஜிட்டெல் முறைமை ஊடாக வழங்கப்படவுள்ளது.அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கும் செயற்றிட்டம் எதிர்காலத்தில் கர்ப்பிணித் தாய்மாரின் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக 20 ஆயிரம் ரூபாய் போஷாக்குக் கொடுப்பனவு கிடைக்கப் பெறும்.
இந்தத் திட்டம் மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்னர் அவர்கள் பிரதேச செயலகம் ஊடாக பெற வேண்டியிருந்தது. எனவே, அதனை இலகுபடுத்துமுகமாக கையடக்கத் தொலைபேசி மூலம் குறித்த தொகைக்கான வவுச்சரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் வகுப்பில் 31 பேருக்கு பதவி உயர்வு : 7 பேர் தமிழ், முஸ்லி...
அமைதியை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ள...
|
|
|


