டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவிப்பு!
Thursday, October 5th, 2023
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்படி, 1 கிலோ கிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை தீவனத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
காற்று மாசு அதிகரிப்பு - தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!
அமெரிக்க நிறுவனமொன்றின் 8 கணக்குகளை இடைநிறுத்த கொழும்பு நீதிவான் உத்தரவு!
தடுப்புக் காவலில் இருந்த கைதி உயிரிழப்பு – உயிரிழப்புக்கு வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையே காரண...
|
|
|


