காற்று மாசு அதிகரிப்பு – தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!

Thursday, November 7th, 2019

இந்தியாவின் புது டெல்லியில் வளி மாசு நிலவுவதால் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு மேலும் அதிகரிக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வளியின் தர குறிகாட்டி 40-க்கும் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபடுதலின் காரணமாக மேற்படி நிலைமை கொழும்பில் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதனால் சுவாச நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி அறிவுறுத்தியுள்ளார்.

Related posts:

இன்றுமுதல் அனைத்து முக்கிய இடங்களும் இராணுவத்தின் அதியுச்ச பாதுகாப்பில் - இராணுவ ஊடகப் பேச்சாளர்!
வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது - ஜனாதிபதியின் தேசிய பாது...
மாகாண நிர்வாக சேவை அதிகாரிகளை தேசிய சேவையில் இணையான பதவிகளுக்கு உள்வாங்குவது தொடர்பான புதிய வழிகாடல்...