ஜ.நா அதிகாரி இலங்கை வருகை!
Friday, July 7th, 2017
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட அறிக்கையிடலாளர், பென் எமர்சன் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
மனித உரிமை பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி நேரில் கண்டறிந்து கொள்ளும் நோக்கில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 14ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் இவர் இக் காலப் பகுதியில் எமர்சன், வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகத்துறை, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
Related posts:
இரண்டாம்மொழி அறிவு வைத்தியர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும்!
நாமலின் கைபேசியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!
2 வாரங்களில் 20,000 பேருக்கு கொரோனா தொற்ற வாய்ப்பு ? - மருத்துவர்கள் எச்சரிக்கை!
|
|
|


