‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ கடன் திட்ட முறைமை ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்!

Saturday, June 23rd, 2018

‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் திட்டம் 16 முன்மொழிவு முறைமைகளை கொண்டுள்ளது. அத்துடன் 11 வட்டி நிவாரண கடன் முன்மொழிவு முறைமைகளையும் வெளிநாட்டு கடன் உதவி முறைமையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை 03 கடன் முன்மொழிவு முறைமைகளையும் 02 நிதி மற்றும் நிதிசாரா வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது.

2018ஆம் ஆண்டு இந்த நிவாரண கடன் முன்மொழிவு முறைமைக்கு வட்டி நிவாரணம் வழங்குவதற்காக மட்டும் அரசாங்கத்தினால் 5,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 60,000 மில்லியன் ரூபா மூலதனத்தை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதன் மூலம் சுமார் 50,000 புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts: