கடற்படையினரை பயன்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீன் பிடியாளர்களை கட்டுப்படுத்துங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசம் வலியுறுத்து!

Tuesday, February 20th, 2024

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீன் பிடியாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசம் அதனை கடற்படையினரின் துணையுடன் கட்டப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்கையிட்டு யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு மருதடி வீடியின் சந்தியில் இருந்து ஆரப்பமான மீனவர்களின் பேரணி இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி சென்றபோது இடையில் பொலிஸாரால் மறிக்கப்பட்டது.

பின்னர் கடற்றொழில் அமைப்புக்களை சேர்ந்த 8 நபர்கள் மாத்திரம் இந்திய துணைத் தூதரகத்துக்குள் மகஜர் வழங்குவதற்கா அனுமதிக்கப்பட்டனர்.

முன்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இன்று (20) முற்றுகையிடப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் கடந்த 18 ஆம் திகதி அறிவித்திருந்தன.

இதனால் இன்று காலைமுதல் இந்திய துணைத் தூதரகத்தை சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்ப கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய குறித்த யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் சமாசத்தினர் மதியம் 12.30 மணியளவில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தின் முன்பாகவும் ஒன்றுதிரண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கியிருந்தனர். குறித்த மகஜரை அமைச்சரின் சார்பில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் பெற்றுக்கொண்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கட்சியின்  யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்  – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தி தரப்பினரிடம் பலமுறை பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு அழைப்பு கோரியிருந்தபோதும் அவர்கள் அது தொடர்பில் இதுவரை கரிசனையும் கொள்ளவில்லை. ஆனாலும் தொடர்ந்தும் தாம் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்..

குறித்த போராட்டதாரர்கள் எல்லை தாண்டும் இந்திய மீன்பிடியாளர்களால் பல வருட காலமாக வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் கடற்தொழில் உபகரணங்களையும் இழந்துள்ள நிலையில் எவ்விதமான இழப்பீடுகளும் கிடைக்கப் பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தாம் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்ற போதும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கமோ கடற்றொழில் அமைச்சரோ எதுவிதமான தீர்வையும் பெற்றுத்தரவில்லை என குற்றம்சாட்டிய போராட்டதாரர்கள் இம்முறையாவது தமது கோரிக்கையை ஏற்று இலங்கை கடற்படையினரை கொண்டு குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்துமாறு அமைச்சரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் - அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியு...
நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை - பொது...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட...