உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
Thursday, April 18th, 2024உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆன்மீக தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதாகவும்,
அதன்படி 20 ஆம் திகதி பிற்பகல் முதல் 21 ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு, காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை இவ் ஊர்வலம் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
குடிநீர் தாங்கி அமைந்து தாருங்கள்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கொக்குவில் கிழக்கு நேதாஜி சனசமூக நிலைய...
கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை !
இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்கும் இந்தியா - எதிர்வரும் 10 ஆம் திகதி நிதி அமைச்சர் பசில...
|
|
|


