ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!
Sunday, October 2nd, 2022
கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.
குறித்த அறிக்கை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை கட்டடம் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்பொருள் சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் சேதமடைந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களினால் சேதப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸாரிடம் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
திடீரென மயங்கி வீழ்ந்தவர் சாவு - 4 நாள்களில் 4 ஆவது சம்பவம்!
நாளை தேசிய துக்கதினம் பிரகடனம்!
புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!
|
|
|


