ஜுலை முதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!
Wednesday, April 4th, 2018
எதிர்வரும் ஜுலை மாதம் முதல் தனியார் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய உள்நாட்டு வரிச் சட்டம் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக வாகனங்கள் மற்றும் வாகனங்களின் உதிரிப்பாகங்கள் என அனைத்தினதும்விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சங்கம் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைவாக கட்டண உயர்வு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ் சம்பவம் : பொலிஸ் தரப்பிலேயே தவறு – பொலிஸ்மா அதிபர்!
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டம் அறிமுகம் - இலங்கை பாதுகாப்பு அமைச்சு!
தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்...
|
|
|


