ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரத்து 330 இந்திய சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 10 ஆயிரத்து 184 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 5 ஆயிரத்து 963 சுற்றுலாப்பயணிகளும் வருகைத்தந்துள்ளனர்.
ஜேர்மனியிலிருந்து 5 ஆயிரத்து 141 பேரும், ரஷ்யாவிலிருந்து 4 ஆயிரத்து 561 பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை: அஸ்கிரிய பீடம்
தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா - பாதுகாப்பு செ...
வடக்கின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் - வடக்கு ஆளுநரிடம் அமெரிக்க தூதுவர் உறுதி!
|
|