ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் – ஜேர்மனிய தூதுவர்

Sunday, June 11th, 2017

இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீறப்படுமாயின், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை திரும்பப் பெறப்படலாம் என இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோன் ஒட்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், அது தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ஜி.எஸ்.பி. பிளஸ்ஸை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். இன்றேல், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை இழக்க நேரிடும். ஏற்கனவே இவ்வாறானதொரு சூழ்நிலையை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஒருதலைப்பட்சமான வரிச்சலுகை. நாங்கள் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Related posts: