ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்தால் 17 நாடுகளில் சந்தைப்படுத்தல் வாய்ப்பு!

Monday, May 15th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெரும்பாலும் இந்த வாரம் வழங்கப்படும் என சுதந்திர வர்த்தக வலைய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

பாரிய அளவில் வரிச்சலுகைக் கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் ஆயிரத்து 400 உற்பத்திகள் 17 நாடுகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளன.

மேலும், இதனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


இரண்டு வாரங்களுக்குள் முக்கிய தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன!
சீனிக்கான வரி குறைப்பை விகாரையில் இருக்கும் போது தெரிந்து கொண்டேன் - அமைச்சர் பந்துல குணவர்த்தன தெர...
நிதி விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாது - தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெ...