ஜப்பானில் வாழும் இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் இலங்கைக்கு 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!
Tuesday, July 6th, 2021
ஜப்பானில் வாழும் இலங்கையின் புலம்பெயர்ந்தோர் சமூகம் 5 கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு அன்பளித்துள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இந்த தீவிர சிகிச்சை உபகரணங்கள் நாட்டில் உள்ள 14 பொது மருத்துவமனைகளுக்கு நன்கொடைகளாக அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு இந்த உதவியை அளித்துள்ள ஜப்பானிய புலம்பெயர்ந்த மக்களுக்கும், இந்த உதவியை ஒருங்கிணைத்து, அவை வந்து சேருவதனையும் அனுசரணை செய்த – ஜப்பானிற்கான இலங்கை தூதரக பணிக்குழாமிற்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவை 1,493 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் - அமை...
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரக்கொட இந்திய குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்கள் கைய...
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு - அனைத்து ஏற்பாட...
|
|
|


