ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து!

ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்பதாக ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) பதவியேற்றிருந்தார்.
ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகிய காரணத்தினால் அவர் இந்த பதவியை பெறுப்பேற்றுள்ளார். இந்நிலையிலேயே பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீண்டும் இலங்கையை அச்சுறுத்தும் இயற்கை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
மே 11 இல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு!
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 356 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...
|
|