புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!

Friday, August 7th, 2020

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை கடைப்பிடிக்கும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றில் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் ஐந்தாம் திகதி இலங்கை மக்கள் தங்கள் அடிப்படை ஜனநாயக உரிமையை பயன்படுத்தினார்கள் தங்கள் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக வாக்களித்தார்கள் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினால் சவால்கள் காணப்பட்ட போதிலும் தேர்தலை உரிய ஒழுங்காக விதத்தில் நடத்தியமைக்காக பாராட்டுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும்போது இலங்கை அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சி,மனித உரிமைகளை சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை கடைப்பிடித்தல்,நாட்டின் இறைமையை பாதுகாத்தல் ஆகிய வாக்குறுதிகளை பின்பற்றும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது என தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆர்வமாக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இன்று இரவுமுதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் - எரிசக்தி அமைச்சு அறிவிப்...
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் - எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப...
ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதால...