ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்!

Wednesday, October 12th, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான ஹெரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் காலநிலை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த எரிக் சொல்ஹெய்ம், பசுமை பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் காலநிலை தலைமைத்துவத்திற்கான சிறந்த பார்வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளதார மாநாட்டில் பங்கேற்றிருந்த அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க எரிக் சொல்ஹெய்மை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுசூழல் திட்டத்திற்கான நிறைவேற்று பணிப்பாளராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டு வருகின்றார்.

முன்பதாக கடந்த 2005 ஆம் ஆண்டு வரை காலங்களில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தினை நிறுத்துவதற்கு சமாதான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கும் முக்கிய நபராக எரிக் சொல்ஹெய்ம் விளங்கினார்.

இதேவேளை எரிக் சொல்ஹெய்ம் இன் இலங்கை விஜயம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


கூட்டமைப்புக்கு கிடைத்த 32 கோடியில் நடந்த அபிவிருத்தி எங்கே? - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ...
இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக...
ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார சு...