ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Musk சந்திப்பு – இலங்கையில் Starlink வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Muskக்கும் இடையிலான சந்திப்பு இன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றது.
10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து, இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி இந்தோனேசியா சென்றுள்ள நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது Starlink சேவை வசதியை செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
இதனிடையே இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு ஒன்றும் இன்று (19) குரா குரா பாலி தீவில் அமைந்துள் “United In Diversity” வளாகத்தில் நடைபெற்றது
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், Global Blended Finance Alliance அமைப்பின் நாடுகள், வெப்ப வலயத்திற்கான இலங்கையின் முன்னெடுப்பு நீலப் பொருளாதாரம் கடற்பாசி தொழில் துறை, உலக தென்துருவ நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, சதுப்புநில பயிர்ச்செய்கை தொடர்பான ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இருதரப்பு பணிக்குழுவை நிறுவுதல் மற்றும் இந்த சமுத்திர எல்லை நாடுகளில் (IORA) தற்போதைய தலைவராக இலங்கையின் வகிபாகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
000
Related posts:
|
|