மலேரியாவை முற்றாக ஒழித்துள்ள நாடு இலங்கை!
Friday, August 12th, 2016
இலங்கை மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான உத்தியோகப்பூர்வ சான்றிதழானது உலக சுகாதார அமைப்பினால் அடுத்த மாதம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டின் போது சான்றிதழ் கையளிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பல வருடங்களாக உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்குள் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மாதம் இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
40 ஆயிரத்து 800 தொன் நெல் கொள்வனவு செய்யத் திட்டம் - நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளிநொச்சிக் காரிய...
கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்க இலங்கைக்கு சீனா நன்கொடை!
உள்ளூர் தேவை அதிகரித்தபோதிலும் இலங்கை்கான தடுப்பூசிகள் திட்டமிட்டபடி வந்தடையும் – இலங்கையில் உள்ள சீ...
|
|
|


