ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஐயம் – ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல்!

Wednesday, May 22nd, 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.

அதன் பின்னர், ஜனாதிபதி அவர்கள் ஈரான் தூதுவர் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு குறுகிய உரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

பின்பு அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில், ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் பதிவு செய்திருந்தார்.

Related posts: