ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் – நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் விசேட அவதானம்!
Sunday, July 24th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் வழமை போன்று கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதற்காக பாதுகாப்பு தரப்பினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்கு இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளரின் முறைகேடு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!
தேர்தல் ஆணையாளர் - சபாநாயகர் அவசர கோரிக்கை!
ஓகஸ்ட் மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு!
|
|
|


