ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறினார் – உறுதிப்படுத்தியது பிரதமர் அலுவலகம்!
Wednesday, July 13th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கோட்டாபய ராஜபக்ச, நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தாம் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு வானூர்தி ஒன்றை வழங்கியதை இலங்கையின் வான்படை உறுதிப்படுத்தியிருந்தது.
இன்று அதிகாலையில் ஜனாதிபதியும் அவரது பாரியாரும், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலைத்தீவுக்கு சென்றதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்திருந்தன.
பின்னர் அவர் மாலைத்தீவில் தரையிறங்கியமையையும் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கல்வியங்காடு சந்திக்கருகில் வீதியோரமாக பொருட்களைப் பரப்பி வைத்து வியாபாரம் செய்த வர்த்தக நிலைய உரிமை...
நாடாளுமன்றத்திற்கு வரும் புதிய வரி சட்ட மூலம் !
பெண்களின் பங்களிப்பு வீழ்ச்சி!
|
|
|


